தேசிய செய்திகள்

மிசோரம் மாநிலத்தில் மார்ச் 1 முதல் கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு - மாநில அரசு உத்தரவு

மிசோரம் மாநிலத்தில் மார்ச் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களை திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

ஐஸால்,

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தற்போது பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மிசோரம் மாநிலத்தில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் திறக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்த மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.

மிசோரம் மாநில உயர் மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் தலைமையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மார்ச் 1 முதல் உயர் கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து