தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் கூட்டணி மணமகன் யாரென்று தெரியாத திருமணம் போன்றது; சவுகான் பேச்சு

எதிர்க்கட்சிகளின் கூட்டணி மணமகன் யாரென்று தெரியாத திருமணம் போன்றது என சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய துணை தலைவர் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங் சவுகான் அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.

அவர் கூறும்பொழுது, எந்தவொரு கொள்கை, நோக்கம் அல்லது தலைவர் இல்லாதது எதிர்க்கட்சிகளின் கூட்டணி. பிரதமர் வேட்பாளர் ஒருவர் இல்லாமல் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியானது, மணமகன் யாரென ஒருவருக்கும் தெரியாத திருமணத்திற்கு தயாராவது போன்றது என கூறியுள்ளார்.

அவர்களது கைகளே ஒன்று சேர்ந்துள்ளன. இதயங்கள் அல்ல. எதிர்க்கட்சி தலைவர்களின் விருப்பத்திற்கு இணங்கவே இந்த கூட்டணி உருவாகியுள்ளது. எந்தவொரு கருத்தியல் அடிப்படையிலும் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 300 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்