முதல் நிகழ்வாக கவர்னர் உரை அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அசாம் மாநில கவர்னர் ஜெக்தீஷ் முகி தனது உரையை வாசிக்க தொடங்கினார். ஊழல் இல்லாத அசாம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் முன்மாதிரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கவர்னர் பேசிய போது, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஏ.ஐ.யு.டி.எப். உறுப்பினர்கள் எழுந்து நின்று அவையில் கோஷமிட்டனர். அதன் பிறகு அவையின் மையப் பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் கவர்னர் மிகவும் அதிருப்தி அடைந்தார். அதனால் அவர் தனது உரையை பாதியிலேயே நிறுத்தினார். எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் முடங்கின.