தேசிய செய்திகள்

மக்களவையில் எதிர்கட்சியினர் அமளி - என்.ஆர்.சி., என்.பி.ஆர். குறித்து விவாதிக்க கோரிக்கை

நாடாளுமன்ற மக்களவையில், குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி

இன்று மக்களவை கூடியதும் கேள்வி நேரம் துவங்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். அப்பேது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர் உள்ளிட்டவை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கேரி அமளியில் ஈடுபட்டனர்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி பேசும் போது

இந்தியா பொது மக்கள் அரசியலமைப்பைக் காப்பாற்ற எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,அவர்கள் அரசியலமைப்பைப் பிடித்து தேசிய கீதத்தைப் பாடி எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர், ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது.இந்திய மக்கள் இரக்கமின்றி கொல்லப்படுகிறார்கள் என கூறினார்.

அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள். எங்கள் இந்தியாவைக் காப்பாற்றுங்கள். குடியுரிமை திருத்த சட்டம்வேண்டாம் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பினர்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அமளி நீடித்ததால் பிற்பகல் 1.30 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...