தேசிய செய்திகள்

கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவிப்பு; மந்திரி சின்ஹாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கோஷம்

இறைச்சி விற்பனையாளர் கொலை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்த மத்திய மந்திரி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கோஷங்கள் எழுந்தன.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜார்கண்டில் இறைச்சி விற்பனையாளரை கொன்ற வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்த காட்சி வீடியோவாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயந்த் சின்ஹா தனது செயலுக்கு பின்னர் மன்னிப்பு கோரி விட்டார்.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய மந்திரியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

அவையில் விமான நிலையங்களை மேம்படுத்துவது பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்க மந்திரி சின்ஹா எழுந்தபொழுது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்ப தொடங்கினர்.

அவர்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு மாலை அணிவிப்பது நிறுத்தப்பட வேண்டும் என அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.

எனினும், சின்ஹா தொடர்ந்து பேசினார். அவரது பதில் உரை முடிந்ததும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மைய பகுதியில் இருந்து திரும்பி சென்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு