தேசிய செய்திகள்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் முடிவுசெய்துள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இன்று காலை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை