தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பொது போராட்டத்தில் ஈடுபடும்; ஆசாத் பேட்டி

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பொது போராட்டத்தில் ஈடுபடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆசாத் பேட்டியில் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் இந்த ஆண்டு வருகிற 18ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தேதி முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொருளாதார மந்தநிலை, பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம், வேளாண் பொருட்களுக்கு குறைவான விலை, வேலை வாய்ப்பின்மை போன்றவை பற்றி பொது போராட்டத்தில் ஈடுபடுவது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இவற்றில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் என்பது ஆசியான் அமைப்பின் 10 உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 6 நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் இடையே தடையில்லா வர்த்தகத்தை மேற்கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் ஆகும். எனினும் இதில் சேர இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்காவின் செல்போனில் வாட்ஸ்-அப் செயலிக்குள் சட்ட விரோதமாக புகுந்து உளவு பார்த்துள்ளனர் என்றும் ஒட்டுக்கேட்டுள்ளனர் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலே டெல்லியில் செய்தியாளர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார். இந்த விவகாரம் பற்றி எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொள்ளும் என்று ஆசாத் கூறினார். இதுபற்றி வருங்காலத்தில் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றியும் முடிவு செய்யப்படும் என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை