தேசிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வரும் ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடைசி நாளான இன்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீரா குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலர் சீதாராம் யெச்சூரி, திமுக சார்பில் கனிமொழி எம்.பி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வரும் 30-ஆம் தேதி முதல், மீரா குமார் ஆதரவு கோரி நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கிடயே, பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத்கோவிந்திற்கு மாற்று வேட்பாளாராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்