தேசிய செய்திகள்

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு: மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நாளை போராட்டம்

நீட் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி நாளை போராட்டம் நடத்த உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளை சேர்ந்த 7 முதல்-மந்திரிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் நடத்துவதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாளை (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. மாநில தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு