தேசிய செய்திகள்

மதுபான கடை திறக்க எதிர்ப்பு; மாணவர்கள் போராட்டம்

சிக்கமகளூரு டவுன் பகுதியில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

சிக்கமகளூரு;

  சிக்கமகளூரு டவுன் சுமுக் நகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான உண்டு உறைவிட பள்ளி உள்ளது. மேலும் தனியார் பள்ளியும் உள்ளது. அந்த பள்ளி அருகே அரசு சார்பில் புதிதாக மதுபான கடை ஒன்று கட்டப்பட்டு திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் நேற்றுமுன்தினம் ஆசாத் பூங்காவில் பாராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் மதுபான கடை வழியாகதான் சென்று வருகிறோம்.

இதனால் அந்த மதுபான கடையை திறப்பதற்கு அனுமதி வழங்க கூடாது. இதற்காக அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் ரமேசை சந்தித்து தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது