தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து உத்தரவு

திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளிக்கவேண்டும் என்று பாஜகவினர் விடுத்த கோரிக்கையை ஏற்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

புதுச்சேரி,

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜேஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டேர் நடிப்பில் உருவான திரைப்படம் தி காஷ்மீர் ஃபைல்ஸ்.

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்திற்கு ஏற்கெனவே அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ள நிலையில், தற்போது புதுச்சேரி அரசும் இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளித்துள்ளது.

பாஜகவினர் இந்த திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளிக்கவேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்