பனாஜி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கோவாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மாநில சுகாதாரத்துறை மந்திரி விஸ்வாஜித் ரானே நேற்று நிருபர்களிடம் இதை தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும் வாகனங்கள் தவிர அனைத்து அரசு போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. பிற மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். திருமணவிழா, திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை செய்யப்பட்டு இருக்கின்றன.
கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இதைத்தொடர்ந்து செய்தால் அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.