புனே,
மராட்டியத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், நாளை மறுநாள் (ஜனவரி 10) முதல் இரவு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. 5 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்படும்.
நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பாக்கள், அழகு நிலையங்கள், சரணாலயங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்படும்.
சலூன் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி மையங்கள் சில விதிவிலக்குகளுடன் வரும் பிப்ரவரி 15ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஓட்டல்கள், உணவு விடுதிகள், திரையரங்குகள், மண்டபங்களில் 50% இருக்கைகளுடன் இரவு 10 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படும். உணவை வீட்டில் டெலிவரி செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது.