தேசிய செய்திகள்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

சிக்கமகளூருவில் மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா சோமனஹள்ளியை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் நாயக். இவரது மனைவி லட்சுமி பாய். இந்த தம்பதிக்கு ரக்ஷிதா (வயது 16) என்ற மகள் இருந்தார். இவர் சிக்கமகளூரு பசவனஹள்ளியில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ரக்ஷிதா கல்லூரிக்கு செல்ல அங்கு வந்த பஸ்சில் ஏற முயன்றார். ஆனால் அதற்குள் டிரைவர் பஸ்சை இயக்கிவிட்டார். இதனால் கால் தவறி பஸ்சில் இருந்து விழுந்த அவர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிக்கமகளூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி அவர் உடல் உறுப்புகள் இன்று அறுவை சிகிச்சை செய்து தானமாக பெறப்படுகிறது. பின்னர் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உடல் உறுப்புகள் தேவையான நோயாளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்