தேசிய செய்திகள்

எங்களுடைய மக்கள், தலைவர்கள் அருணாச்சல பிரதேசம் செல்வார்கள் - சீனாவிற்கு இந்தியா பதிலடி

எங்களுடைய மக்கள், தலைவர்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல உரிமை உள்ளது என சீனாவிற்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அருணாச்சல பிரதேசத்தை சீனா தெற்கு தீபெத் என்று கூறி உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்திய தலைவர்கள், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு பயணம் செய்வதற்கு தொடர்ச்சியாக சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. பிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேசத்திற்கும் இப்போது சீனா எதிர்ப்பை தெரிவித்து உள்ளது.

சீனாவிற்கு பதிலளித்து உள்ள இந்தியா, எங்களுடைய தலைவர்கள், மக்கள் அருணாச்சல பிரதேசத்திற்கு செல்ல உரிமை உள்ளது என குறிப்பிட்டு உள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராவீஷ் குமார் பேசுகையில் அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்தியாவின் தலைவர்கள் மற்றும் மக்கள் அங்கு செல்வதற்கு முழு உரிமையும், உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியா - சீனா இடையே 3,488 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லைப் பகுதி உள்ளது. எல்லைப்பிரச்சனை தொடர்பாக இருநாடுகள் இடையே 20 முறை பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்