புதுடெல்லி,
துல்லிய தாக்குதல் 2-ம் ஆண்டு கொண்டாட்டம் பற்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
ராணுவ வீரர்களின் துணிச்சலை எண்ணி நாட்டு மக்கள் பெருமை கொள்கின்றனர். அமைதி, வளர்ச்சிக்கு யார் இடையூறு ஏற்படுத்தினாலும் நமது வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாங்கள் நினைவில் வைத்துள்ளோம். பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தார்கள்.
பேரிடர் காலங்களின் போது மீட்பு, நிவாரணப்பணிகளில் இந்திய விமானப்படை முன்னணியில் உள்ளது. நெருக்கடியில் இருந்து மீண்ட நிலையிலும் டோமியின் உத்வேகம் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு.
படகு போட்டியில் பங்கேற்ற போது காயமடைந்த கடற்படை கமாண்டர் அபிலாஷிடம் போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். காந்தி நமக்கு அளித்த போதனைகள் இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, தூய்மை சேவை திட்டம் வெற்றி பெற்றதற்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.