தேசிய செய்திகள்

கொரோனா 2-வது அலையில் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழப்பு

கொரோனா 2-வது அலையில் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன் நின்று பணியாற்றும் மருத்துவர்களும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவத்தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் 420-மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தலைநகர்

டெல்லியில் மட்டும் 100-மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 96 மருத்துவர்களும் உத்தர பிரதேசத்தில் 41 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு