தேசிய செய்திகள்

மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை

மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்களின் கையிருப்பில் 3.44 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 57,05,07,750 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3,44,06,720 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர்.

கூடுதலாக 13,34,620 தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.