புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று 1 கோடியே 03 லட்சத்து 35 ஆயிரத்து 290 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றை ஒப்பிடுகையில், இன்று கணிசமாக குறைந்துள்ளது. இன்று மாலை 7 மணி நிலவரப்படி 65 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. எனினும், இன்று போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை பின்னிரவுதான் முழுமையாக தெரியவரும்.