தேசிய செய்திகள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்புக்கு அசாதாரண வெப்ப நிலை காரணம்: ஆய்வு தகவல்

பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

தினத்தந்தி

இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

* உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.

* 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.

* இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.

* உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.

* இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்