தேசிய செய்திகள்

வெளிநாடு செல்பவர்கள் பூஸ்டர் டோஸ் போட 9 மாதம் காத்திருக்க தேவையில்லை - நோய் தடுப்புக்கான ஆலோசனைக்குழு பரிந்துரை

வெளிநாடு செல்பவர்கள் பூஸ்டர் டோஸ் போட 9 மாதம் காத்திருக்க தேவையில்லை என்று மத்திய அரசுக்கு நோய் தடுப்புக்கான ஆலோசனைக்குழு பரிந்துரைத்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நடவடிக்கையால் வெளிநாடு செல்வோர் பாதிக்கப்பட்டனர். பூஸ்டர் டோஸ் போட்டால் மட்டுமே அனுமதி அளிக்கும் நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வெளிநாடு செல்வோர் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை எனவும், அந்தந்த நாடுகளின் விதிகளுக்கு ஏற்ப தேவைப்படும் நேரத்தில் போட்டுக்கொள்ளலாம் எனவும் தேசிய நோய் தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு