தேசிய செய்திகள்

கரௌலி வன்முறைக்கு ராஜஸ்தான் அரசே காரணம்: ஓவைசி குற்றச்சாட்டு

சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் ராஜஸ்தான் அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் முஸ்லீம்களை குறிவைத்து வன்முறை நடைபெற்றதாகவும் ஓவைசி விமர்சித்துள்ளார்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் கரௌலி நகரில், கடந்த 2-ம் தேதி நவ சம்வத்ஸர் விழாவையொட்டி, மத ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஊர்வலத்தின் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறை அலுவலர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்தது. பல இடங்களில் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஜெய்பூர் வந்த ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி, கரெளலி வன்முறைக்கு ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என்றார். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் ராஜஸ்தான் அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும் முஸ்லீம்களை குறிவைத்து வன்முறை நடைபெற்றதாகவும் விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...