தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் ஆலையில் வெடிவிபத்து: தொழிலாளர் உயிரிழப்பு; 2 பேர் காயம்

உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் ஆலை ஒன்றில் அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர் உயிரிழந்து உள்ளார்.

தினத்தந்தி

கான்பூர்,

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் தாதா நகர் தொழிற்சாலை பகுதியில் ஆக்சிஜன் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், சிலிண்டரில் ஆக்சிஜனை நிரப்பும் பணியின்பொழுது திடீரென அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் ஆலை தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 2 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்