தேசிய செய்திகள்

டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நாளை ஆஜர்படுத்தப்படுகிறார்

டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கிடைக்காத நிலையில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் கொடுத்துள்ள வாரண்ட் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக சி.பி,ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை மதியம் வரை சி.பி.ஐ. அலுவலகத்தை விட்டு வெளியே அழைத்துவரப்போவதில்லை என்றும், ப.சிதம்பரத்திற்கான மருத்துவமனை பரிசோதனை கூட சி.பி.ஐ. அலுவலகத்திலேயே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நாளை ஆஜர்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு