லக்னோ,
பத்மாவத் திரைப்படத்திற்கு எதிராக வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது, வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் எஸ்சிஎம் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சஞ்சய் அகர்வால் குண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். படத்திற்கு எதிராக போராடி வரும் கும்பல் அவரை அடித்து உதைத்து உள்ளது. அவருடைய பிஎம்டபிள்யூ காரும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரித்து வருகிறது.