தேசிய செய்திகள்

‘பத்மாவதி’ திரைப்படம் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பத்மாவதி திரைப்படம் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.

மும்பை,

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் பத்மாவதி என்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது.

தீபிகா படுகோனே நடிப்பில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய பத்மாவதி திரைப்படம் வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்த நிலையில் பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தொடங்கினர். பல்வேறு பகுதிகளில் போராட்டம் நீடித்த நிலையில் அப்படத்தில் நடித்த தீபிகா படுகோனேவிற்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பத்மாவதி படத்தை திரையிட ராஜஸ்தான், உத்தர பிரதேச அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பல்வேறு நிலையில் எதிர்ப்பு எழுந்த நிலையில் திரைப்படம் திட்டமிட்டப்படி திரைக்கு வருமா? என்ற கேள்வி வலுத்த நிலையிலே நீடித்தது.

இப்போது பத்மாவதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ், தேதி குறிப்பிடாமல் படத்தை வெளியிடும் தேதியை ஒத்திவைத்து உள்ளது. "தானாக முன்வந்து" இம்முடிவை எடுத்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது. வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து படம் வெளியிடப்படும் தேதி ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்ட விதிகளுக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்து உள்ள தயாரிப்பு நிறுவனம் வரும் நாட்களில் திரைப்படத்தை வெளியிடும் தேதியை அறிவிப்பதாக குறிப்பிட்டு உள்ளது.

எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, திரைப்படத்தை வெளியிட நாங்கள் தேவையான அனைத்து ஒப்புதல்களையும் விரைவில் பெறுவோம் என்று என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தேவையான திருத்தங்களை செய்த பின்னரே பத்மாவதி படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில பா.ஜனதா முதல்-மந்திரி வசுந்தரா ராஜே மத்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்