புதுடெல்லி
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாற்றுப் பரீட்சைக்கான கேள்வி தாளில் பத்மாவதி குறித்த கேள்விகளை கேட்டு உள்ளது. இடைக்கால வரலாறு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது.
ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது?அலாவுதீன் கல்கி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும் என கேள்விகளை கேட்டு உள்ளது. அந்த கேள்விக்கு உரிய பதிலுக்கு 10 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதே கேள்வித்த்தாளில் சர்ச்சைக்குரிய மூத்தலாக் குறித்த கேள்வியும் இடம் பெற்று உள்ளது. "முத்தலாக் குறித்து விவாதிக்கவும் எனக் கேட்கப்பட்டு உள்ளது.
செமஸ்டர் பேப்பரின் ஒரு பகுதியாக மத்தியகால இந்தியாவில் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளும் சுல்தானிய ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த கேள்வியும் இடம்பெற்று உள்ளது.
வரலாற்றுத் துறையின் பேராசிரியர் தபீர் கலாம் கேள்விதாளில் இத்தகைய கேள்விகள் இடம் பெற்று இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் யார் இந்த கேள்வித் தாளை தயாரித்தார்கள் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. இது 3 -4 நபர்களால் தயாரிக்கப்பட்டது என கூறினார்.
இடைக்கால வரலாற்றுத் துறையின் உதவி பேராசிரியரான ராஜீவ் ஸ்ரீவாஸ்தவா, தொலைபேசியில் கிடைக்கவில்லை ஆனால் ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசுகையில் அவர் கேள்விகள் சரியானது தான் என கூறி உள்ளார்.
கேள்விதாளில் இடம்பெறும் சிக்கல்கள் "நீங்கள் இடைக்கால வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாற்றை கற்றுக்கொள்வதன் மூலம் தானாகவே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என கூறினார்.