தேசிய செய்திகள்

இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு - 10 பேர் கைது

இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். மேலும் படகிலிருந்த ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக இந்திய கடலோரக் காவல்படை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப்படையினருடன் இணைந்து மேற்கோண்ட கூட்டு நடவடிக்கையில், இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டது.

படகிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் சுமார் 40 கிலோ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக படகு ஓகாவுக்கு கொண்டு வரப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு