தேசிய செய்திகள்

டெல்லியில் கைது செய்யப்பட்ட பாக். பயங்கரவாதிக்கு 14 நாள் விசாரணை காவல்

போலி ஆவணம் மூலம் 13 வருடங்களாக டெல்லியில் வசித்து வந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாகிஸ்தானை சேர்ந்த அஷ்ரப் என்பவன் டெல்லியில் போலி ஆவணங்கள் மூலம் 13 ஆண்டுகள் வசித்து வந்துள்ளான். அவனை போலீசார் கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நரோவலைச் சேர்ந்தவன் என்றும் பயங்கரவாதிகளின் அறிவுறுத்தலின் பேரில் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெவித்துள்ளது.

மேலும் அஷ்ரப் ஜம்மு காஷ்மீர் உட்பட பல இடங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது. காஷ்மீர் உட்பட பல நகரங்களில் வாழ்ந்த அஜ்மீர், தற்போது டெல்லியில் உள்ள லட்சுமி நகரில் வசித்து வந்துள்ளான். இந்தநிலையில் லக்ஷ்மி நகரின் ரமேஷ் பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டான்.

அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் , யமுனா வங்கிக்கு அருகில் இருந்து ஒரு ஏகே 47 துப்பாக்கி, 60 ரைபிள் ரவுண்டுகள், இரண்டு பிஸ்டல்கள், 50 ரவுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். தற்போது பண்டிகை காலம் என்பதால், மிகப்பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்படுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், பயங்கரவாதி முகமது அஷ்ரப்பை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்