தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல் - இந்தியா பதிலடி

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா மற்றும் சந்தர்பானி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

ஏற்கனவே நேற்றுமுன்தினம் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணாகாதி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?