தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.

தினத்தந்தி

ஜம்மு,

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே இருக்கும் இந்திய கிராமங்களை குறிவைத்து நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு 7 மணி அளவில் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இதேபோன்று எல்லைக்கட்டுப்பாடு அருகே உள்ள பாலக்கோட் மற்றும் மென்டகர் செக்டர் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் சேதம் ஏதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றார்.


பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்