தேசிய செய்திகள்

“பாகிஸ்தானியர்களுக்கு இந்திய வாக்காளர் அடையாள அட்டை” விசாரணை தொடங்கியது

டேராடூனில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு இந்திய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பாகிஸ்தானியர்கள் நீண்ட கால வீசாவில் தங்கியுள்ளனர். அப்படியிருக்கும் 23 பாகிஸ்தானியர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மாநில போலீசின் உளவுப்பிரிவு நடத்திய சோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முழு விசாரணையை தொடங்கியுள்ள போலீஸ், நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது. நீண்ட கால வீசாவில் பாகிஸ்தானி சிந்தி இந்துக்கள் இந்தியாவில் இருப்பது சட்டப்பூர்வமானது. ஆனால் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது என்பது சட்டப்பூர்வமானது கிடையாது.

இப்போதைய நிலவரப்படி டேராடூனில் 275 பாகிஸ்தானியர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை