ஜம்மு,
எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று எல்லையில் ராஜோரி செக்டாரில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. சிறியரக மோட்டார் ஆயுதங்களை கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிலையை நோக்கி பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியும், இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
சம்பவ இடத்திலிருந்து கடைசியாக வெளிவந்த தகவலின்படி இருதரப்பு இடையேயும் மோதல் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.