தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்; எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

தினத்தந்தி

ஜம்மு,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட் மெந்ஹார் ஆகிய செக்டாரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், எல்லையோர கிராமத்தில் வசிக்கும் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்