ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்த கிராமங்கள் மற்றும் ராணுவ முகாம்களை நோக்கி பாகிஸ்தான் படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்தோர் அல்லது சேதவிவரம் பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை ஆகிய பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இந்த வருடத்தில் தாக்குதல் நடந்து வருகிறது.