கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நபர் சுட்டுக்கொலை

காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் நேற்று காலை சர்வதேச எல்லையைத் தாண்டி மர்மநபர்கள் ஊடுருவுவதை எல்லை காவல் படையினர் கண்டனர். சம்பா செக்டாரின் மங்கு சாக் பார்டர் எல்லைக்கோட்டு பகுதியில் அதிகாலை 2.50 மணி அளவில் இந்த ஊடுருவல் முயற்சி நடந்தது.

இதையடுத்து உஷாரான ராணுவ வீரர்கள், துப்பாக்கி சூடு நடத்தினர். துணிச்சலாக முன்னேறி வந்த ஊடுருவல்காரர் சிறிது நேரத்தில் ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையானார். இறந்தவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது. அந்த பகுதியில் வேறு யாரேனும் பதுங்கியுள்ளனரா என்று தேடுதல் வேட்டை நடந்தது.

நேற்று முன்தினம் பூஞ்ச் மாவட்டத்தில் இதுபோன்று நடந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது