தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல், இந்தியா பதிலடி

காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

தினத்தந்தி

ஜம்மு,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சூழலில்,பூஞ்ச் மாவட்டத்தின் டிக்வர் செக்டார் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகளின்மீது பாகிஸ்தான் படையினர் ஏறக்குறைய 3 மணிநேரம் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதேபோல், ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் பகுதியில் இந்திய ராணுவ நிலைகளின் மீதும் பாகிஸ்தான் படைகள் இன்று தாக்குதல் நடத்தின.

பூஞ்ச் மாவட்டத்தின் காரி கர்மரா செக்டார் பகுதியில் இன்று மாலை சுமார் 4 மணியளவில் மீண்டும் இருதரப்பு ராணுவத்தினரும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இரு இடங்களிலும் இந்திய வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்றைய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு