தேசிய செய்திகள்

ஓவைசி போன்றவர்களுக்காகத்தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது ; மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

ஓவைசி போன்றவர்களுக்காகத்தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜாமியா மில்லியா, அலிகார் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் நாட்டுக்கு எதிராக ஓவைசி போன்றோர் விஷத்தை பரப்புவதாக பாஜக தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ்சிங் கூறியுள்ளார்.

கிரிராஜ்சிங் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது ;- ஓவைஸியைப் போன்றவர்கள் ஜாமியா மில்லியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் நாட்டுக்கு எதிராக விஷத்தை பரப்புகின்றனர்.

ஓவைசி மற்றும் அவரைப் போன்ற அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவர்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இந்தியர்கள் தற்போது விழித்துவிட்டனர். எங்களை தாழ்த்தவோ பிரிக்கவோ முயற்சிக்காதீர்கள். பாகிஸ்தான் போன்ற நாடுகள் உங்களுக்காகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன. எங்களை அமைதியாக வாழவிடுங்கள்என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து