தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்தியா பதிலடி

பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதியில் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையோர கிராமங்கள் மற்றும் நிலைகளை குறி வைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். ஹிராநகர் செக்டாரில் போபியா பகுதியில் சனிக்கிழமை இரவு 10.25 மணி அளவில் இந்த அத்துமீறல் தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதலுக்கு இந்திய எல்லைக்காவல் படையினர் பதிலடி தாக்குதல் தொடுத்தனர். அதிகாலை 4.30 மணி வரை இரு எல்லைகள் இடையே துப்பாக்கிச் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. இருந்தாலும் சேத விவரங்கள் பற்றி எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால், எல்லையோரம் வசிப்பவர்கள், இரவு நேரத்தில் பதுங்கு குழிகளில் வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்