தேசிய செய்திகள்

காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்; இந்தியா பதிலடி

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாபூர், கிர்னி மற்றும் தேக்வார் ஆகிய பிரிவுகளில் இன்று மாலை 5.30 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு இந்தியாவை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், அதனை மீறும் வகையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு உள்ளது. எனினும் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்