ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா பிரிவில் போர்நிறுத்த ஒப்பந்த மீறலாக பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6 மணியளவில் துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, பூஞ்ச் நகரில் தேக்வார், மால்டி மற்றும் டல்லான் ஆகிய பகுதிகளில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மாலை 6.15 மணியளவில் மற்றொரு துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கும் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி அளித்து வருகின்றனர்.