தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

தினத்தந்தி

ஜம்மு,

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாடு கோட்டையொட்டி அமைந்துள்ள கிர்ணி, கஸ்பா ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் நேற்று சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.

பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் காயமோ அல்லது சேதமோ ஏற்படவில்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை