ஜலந்தர்,
பாகிஸ்தான் பகுதியில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் நுழைய முயன்றதை வீரர்கள் கண்டுபிடித்தனர். உடனே அவர்களை தடுத்து நிறுத்திய வீரர்கள் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறே இந்திய எல்லையை நோக்கி முன்னேறினர். எனவே எல்லை பாதுகாப்பு வீரர்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த பகுதியில் நேற்று வீரர்கள் தேடும் பணிகளை மேற்கொண்டனர்.
அப்போது ஒருவர் குண்டடிபட்டு இறந்து கிடந்தார். காயமடைந்து கிடந்த மற்றொருவரை வீரர்கள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பாக்கெட் ஹெராயின் போதைப்பொருள், கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.45 கோடி ஆகும். எல்லை பாதுகாப்பு படையினரின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.