தேசிய செய்திகள்

பாகிஸ்தான் விமானிகள் ரபேல் போர் விமானங்களை ஓட்டும் பயிற்சியை பெற்றார்களா?

பாகிஸ்தான் விமானிகள் ரபேல் போர் விமானங்களை ஓட்டும் பயிற்சியை பெற்றார்கள் என்று வெளியானது பொய்யான செய்தி என பிரான்ஸ் கூறியுள்ளது.

இந்தியாவை போன்று கத்தாரும் பிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் 36 எண்ணம் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்கட்ட விமானங்கள் கத்தாருக்கு பிப்ரவரியில் வந்தது. இந்தியாவிற்கு செப்டம்பர் மாதம் ரபேல் விமானம் வருகிறது. இந்நிலையில் கத்தார் உடனான பயிற்சி ஒப்பந்தம்படி பாகிஸ்தான் விமானிகள் ரபேல் போர் விமானங்களை ஓட்டும் பயிற்சியை பெற்றனர் என ஏஐஎன் இணையதளம் செய்தி வெளியிட்டது. இது தொடர்பான செய்தி வைரலாக பரவிய நிலையில் பொய் என்று பிரான்ஸ் பதிலளித்துள்ளது.

பாகிஸ்தான் விமானிகள் ரபேல் போர் விமானங்களை ஓட்டும் பயிற்சியை பெற்றார்கள் என்று வெளியானது பொய்யான செய்தி என பிரான்ஸ் கூறியுள்ளது.

இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் அலெக்சன் ஜிக்லர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இது போலியான செய்தி என்று என்னால் உறுதிப்படுத்த முடியும், என குறிப்பிட்டு யூகங்களுக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு