தேசிய செய்திகள்

போலீஸ் நிலையத்திலேயே 9 மாதமாக வாழும் பாகிஸ்தான் ஆசாமி: 26-ந் தேதி தாயகம் திரும்புகிறார்

போலீஸ் நிலையத்திலேயே 9 மாதமாக வாழும் பாகிஸ்தான் ஆசாமி, வரும் 26-ந் தேதி தாயகம் திரும்ப உள்ளார்.

தினத்தந்தி

போபால்,

பாகிஸ்தானை சேர்ந்தவர் முகமது இம்ரான் வர்சி (வயது 40). இவர், 14 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவுக்கு வந்து கொல்கத்தாவில் வசித்தார். ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. 2008-ம் ஆண்டு, மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு வந்தபோது, அவர் சதி மற்றும் மோசடி வழக்கில் சிக்கினார். அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் தண்டனை முடிந்தநிலையில், சட்ட சிக்கல்கள் காரணமாக அவரால் பாகிஸ்தானுக்கு திரும்ப முடியவில்லை. ஷாஜகானாபாத் போலீஸ் நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். 9 மாதமாக அவருக்கு போலீசாரே உணவு வழங்கி வருகிறார்கள்.

சட்ட சிக்கல்கள் முடிந்ததை தொடர்ந்து, வருகிற 26-ந் தேதி, வர்சி பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறார். அவரை வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது