தேசிய செய்திகள்

காஷ்மீருடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணையும் - மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி உறுதி

காஷ்மீருடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணையும் என்று மேற்கு பிராந்திய விமானப்படை தளபதி அமித் தேவ் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் 1947-ம் ஆண்டு முதன் முதலாக ராணுவம் வந்த நினைவு தினத்தை ராணுவம் கொண்டாடி வருகிறது. இதையொட்டி பட்காமில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் விமானப்படையின் மேற்கு பிராந்திய தளபதி அமித் தேவ் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, காஷ்மீருடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இணையும் என உறுதிபட தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், காஷ்மீர் ஒன்றுதான். .இருபுறமும் வாழும் மக்களுக்கு பொதுவான இணைப்புகள் உள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுப்பதற்கு தற்போது எங்களிடம் திட்டம் இல்லை, ஆனால், கடவுள் விரும்பினால் அதுவும் இருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களை பாகிஸ்தானியர்கள் நியாயமாக நடத்துவதில்லை என்று தெரிவித்தார்.

விமானப்படை மற்றும் ராணுவம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் காஷ்மீரின் இந்த பகுதியின் சுதந்திரத்தை உறுதி செய்ததாக கூறிய அமித் தேவ், என்றாவது ஒரு நாள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், காஷ்மீரின் இந்தப் பகுதியில் இணையும் எனவும், வரும் ஆண்டுகளில் காஷ்மீர் முழுவதையும் நாம் பெறுவோம் என உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்