புதுடெல்லி,
புதிய வங்கி கணக்கு துவங்க, லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை மேற்கொள்ள, வருமான வரி விலக்கு பெற, 50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்ய உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கும் பான் கார்டு அவசியமாகிறது.
பான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான காலக்கெடு ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டது. எனினும் டிசம்பர் 31 ஆம் தேதி(நாளை) இதற்கான கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இதற்கான கடைசி தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.