புதுடெல்லி
இந்த நிபுணர் குழு கங்கையை தூய்மைப்படுத்துவது தொடர்பாக ஒரு புதிய சட்டத்தையும் வகுத்து வருகிறது. சட்டம் நிறைவேற்றப்பட்டால் நதி ஒன்றின் தொடர்பாக வரையப்பட்ட முதல் வரைவுச் சட்டமாக இருக்கும். இந்நிபுணர் குழு ஒருங்கிணைந்த வளர்ச்சிக் குழு என்ற அமைப்பை தற்போதிருக்கும் கங்கைக்கான தேசிய குழுவிற்கு பதிலாகவும், அதே போல தூய கங்கைக்கான தேசிய இயக்கத்திற்கு பதிலாக தேசிய கங்கை நதி படுகை மேலாண்மை வாரியத்தையும் பரிந்துரைத்துள்ளது.
ஒருங்கிணைந்த வளர்ச்சிக் குழு பிரதமர் தலைமையிலும், தூய கங்கைக்கான தேசிய இயக்கம் நீர்வள அமைச்சர் தலைமையிலும் அமைகின்றன.
பிரதமர் தலைமையிலான குழுவில் நீர்வளத்துறை அமைச்சர் உட்பட 19 உறுப்பினர்கள் இருப்பார்கள். நீர்வளத்துறை அமைச்சரின் வாரியத்தில் நீர்வளத்துறை செயலர் உட்பட 13 உறுப்பினர் இருப்பார்கள்.
ஒருங்கிணைந்த வளர்ச்சிக் குழு கங்கை நதிப் படுகையின் மேலாண்மைக் குறித்து வழிகாட்டுதல்களை வகுக்கும் என்றார். இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியின்றி அணை கட்டுவது உட்பட எந்தவொரு செயல்பாட்டையும் மேற்கொள்ள இயலாது. இதே குழு கங்கையை தூய்மைப்படுத்தும் பணியில் மாநிலங்களுக்கிடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளையும் களையும். இதன் அதிகாரம் உத்தரகாண்ட், உ.பி, பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், டெல்லி, இ,பி., ம.பி., சத்திஸ்கர், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் கங்கையின் துணை நதிகள் பாயும் மாநிலங்களில் செல்லுபடியாகும்.
மேலாண்மை வாரியும் மாசு தொடர்பாகவும், நதியின் உயிரியல், இராசாயன, பௌதீக ஒருங்கிணைபையும், அதன் தொடர்ச்சியான ஓட்டத்தையும் கண்காணிக்க பொறுப்பாக இருக்கும். இதன் தலைமைக்கு பொது இயக்குநர் ஒருவரை நியமிக்கவும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறு பரிந்துரைகள் இருந்தாலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்ட பின்னர் கங்கையுடன் தொடர்புடையவர்களின் கருத்து கேட்கப்பட்டால் அவற்றின் அடிப்படையில் மாறுதல்கள் இருக்கும் என்று இந்த சட்ட முன் வரைவைப் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட மற்றொரு குழுவின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.