மொஹாலி,
வட மாநிலங்களில் பெய்துவரும் பருவமழையால் அங்குள்ள மக்கள் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்திலும் பல பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
இதனிடையே, பஞ்சாப் மாநிலம் ஜலாந்தர் பகுதியில் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அம்மாநில முதல் மந்திரி பகவந்த் மான் சிங் சென்றார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக அவர் படகில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அவர் பயணித்த படகு, கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. படகில் அதிக நபர்கள் சென்றதால், லேசாக கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.