பாலியல் பலாத்கார வழக்கில் கடுங்காவல் தண்டனை பெற்றுள்ள குர்மீத் ராம் ரஹீம் சிங், தன்னுடைய ஆதரவாளர்களை எப்படி வன்முறையில் ஈடுபட தூண்டினார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் குர்மீத் ராம் ரஹிம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சான் . இவருக்கு அரியானா போலீசார் லுக வுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இவர் குர்மீத் ராம் ரஹீமின் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்பட்டார்.சர்ச்சைக்குரிய பிரிவு தேரா சச்சா சவுதா தலைவராக ஹனிபிரீத் இன்சான் உருவாகி வருகிறார்.
ஹனி பிரீத் இனசான் தன்னைதானே பாபா ஏஞ்சல் (அப்பாவின் தேவதூதன்) என அழைத்து கொள்கிறார் தொண்டு நிறுவன இயக்குனர், ஆசிரியர் மற்றும் நடிகை என பல வடிவங்கள் அவருக்கு உள்ளது.
சர்ச்சைக்குரிய டெரா சச்சா விசாரணையில், ராம் ரஹீம் முன்னாள் மெய்க்காவலரானபியாந்த் சிங் ஹனிபிரீத் இன்சான் எப்போதுமே ராம் ராகிமுடனதான் இருப்பார் என கூறி இருந்தது குறிப்பிட தக்கது.
ஹனிபிரித் வெளி உலகிற்கு தத்து எடுத்த மகளாக தோன்றினாலும் குர்மீத்துடன் இவர் நெருங்கிய தொடர்பு உடையவர் ஆவார்.பிஸ்வாஸ் குப்தா என்ற பணக்கார பக்தரின் மனைவி ஹனி. அவர் பாபா மற்றும் ஹனி ஆகியோரால் சித்திரவதை செய்யப்பட்டு வெளியேற்றபட்டார்.
குர்மீத்துக்கு அவரது மனிவி மூலம் பிறந்த இரண்டு மகள்கள் இருந்த போதிலும், ஹனி அவரது வாரிசு என்று கூறப்படுகிறது.தேரா சச்சா வின் அனைத்து பகுதிகளும் ஹனிக்கு அத்துபடி.
தற்போது அரியானா போலீசார் ஹனியை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அரியானா போலீசார் அவருக்கு லுக்கவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.